
மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 68 பேரை காணவில்லை என சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்து சென்ற நிலையில், கப்பலில் இருந்த 130 பயணிகளில் 45 பேர் மீட்கப்பட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறன.
விசாரணையில், கப்பலில் எதிர்பாராதவிதமாக தண்ணீர் உள்ளே புகுந்ததன் காரணமாக கவிழ்ந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
அத்துடன், சரக்குகளை கொண்டு செல்லக்கூடிய கப்பலில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.