உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போரில் 13,500 ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை செவ்வாய்க்கிழமை(15) தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மார்ச் 15 வரை 13,500 ராணுவ வீரர்கள், 81 விமானங்கள், 95 ஹெலிகாப்டர்கள், 404 பீரங்கிகள், 1,279 ஆயுதம் ஏந்திய வாகனங்கள், 640 வாகனங்கள், 3 போர்க் கப்பல்கள் உள்ளிட்டவை ரஷ்ய படை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.