• Thu. Oct 31st, 2024

தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு : அகதிகள் பயங்கரவாதிகள் – ரஷ்ய அதிபர் புதின்

Aug 23, 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்த ரஷ்ய அதிபர் புதின் அகதிகளை பயங்கரவாதிகள் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் அமைப்பு கைப்பற்றிய நிலையில் அந்நாட்டிலிருந்து மக்கள் பலர் அகதிகளாக வெளியேற தொடங்கியுள்ளனர். அவர்களில் பலருக்கு ஈரான், பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அடைக்கலம் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ஆப்கன் அகதிகளுக்கு மத்திய ஆசிய நாடுகள் அடைக்கலம் தர வேண்டுமென மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ’ஆப்கன் அகதிகளை விசா இல்லாமல் ஏற்க மேற்கத்திய நாடுகள் தயாராக இல்லாத நிலையில் நாங்கள் மட்டும் ஏன் ஏற்க வேண்டும்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ‘அகதிகள் என்ற பெயரில் வரும் பயங்கரவாதிகளை ஏற்க ரஷ்யா தயாராக இல்லை’ என அவர் கூறியுள்ளார், தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு அகதிகளை பயங்கரவாதிகள் என புதின் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.