• Mon. May 29th, 2023

37வது மனைவியை திருமணம் செய்து கொண்ட நபர் – வேற லெவல் தாத்தா!

Jun 9, 2021

28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது மனைவியை திருமணம் செய்து கொண்ட தாத்தாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புராணக்கதைகளில் இப்படியான கதைகள் எல்லாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒருவர் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் இந்த 37வது திருமணத்தை அவர் செய்துள்ளார்.

இது குறித்து ரூபர் சர்மா என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் முதியவர் ஒருவருக்கு இளம் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது.

அந்த வீடியோ பதிவிடும் போது அவர் அதில் “தைரியமான மனிதர், 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருமணம் எங்கு நடந்தது? இந்த திருமணத்தை செய்தது யார்? இதில் குறிப்பிட்டிருப்பது உண்மை தானா என்ற விபரங்கள் தெரியவில்லை.