• Mon. May 23rd, 2022

ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டது

Oct 29, 2021

உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளி வந்தது.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் பேஸ்புக்கின் புதிய பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஃபேஸ்புக் புதிய பெயர் ‘மெட்டா’ என அழைக்கப்படும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் என்பது உலக அளவில் புகழ்பெற்ற பெயராக இருந்தது என்பதும் அதே போல் தமிழிலும் முகநூல் என்று தமிழகம் முழுவதும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் ’மெட்டா’ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.