• Sun. Apr 14th, 2024

ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையத்தை கலைத்த தலீபான்கள்

Dec 27, 2021

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தலீபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையத்தை தலீபான்களை கலைத்துள்ளனர்.

தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் புகார் ஆணையம் ஆகிய இரு அமைப்புகளையும் தலீபான் அரசு கலைத்துள்ளது.

இது தொடர்பாக தலீபான்கள் அரசின் செய்தித்தொடர்பாளர் பிலால் கரீமி கூறுகையில், நாட்டின் தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையமும், தேர்தல் புகார் ஆணையமும் கலைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலையில் இது தேவையற்ற அமைப்புகள். எதிர்கா