• Wed. Mar 27th, 2024

நோர்வேயிடம் உதவி கோரும் தலிபான்கள்

Jan 24, 2022

ஆப்கானிஸ்தானின் நிலைமை மோசமடைந்ததால், தலிபான்கள் நோர்வேயின் உதவியை நாடியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் ஆக்கிரமித்ததை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அங்கு மனித உரிமை மீறல்கள் நடக்கிறது என்று சர்வதேச அளவில் வழங்கப்பட்ட உதவிகளும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள், பட்டினியால் வாடி வருகிறார்கள்.

எனவே, தலிபான்கள் நோர்வேயிடம் உதவி கேட்டுள்ளனர். இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் குழு நோர்வேக்கு சென்றிருக்கிறது. அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.

அதனைத்தொடர்ந்து, இன்று பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.