• Tue. Sep 10th, 2024

22 நாடுகளை ஆபத்தான பகுதியில் சேர்த்த அமெரிக்கா

Jan 20, 2022

கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஆஸ்திரேலியா உட்பட 22 நாடுகளை அமெரிக்கா பயணப் பட்டியலில் மிகவும் ஆபத்தான பகுதியில் சேர்த்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா மீண்டும் தலை தூக்கியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டுவருகிறார்கள். அதன்படி அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதாவது அமெரிக்கா கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இஸ்ரேல், ஆஸ்திரேலியா உட்பட 22 நாடுகளை பயணப் பட்டியலில் மிகவும் ஆபத்தான பகுதியில் சேர்த்துள்ளது. ஆகையினால் அமெரிக்க நாட்டு பொதுமக்கள் மேல் குறிப்பிட்டுள்ள 22 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.