• Thu. May 19th, 2022

சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கிய டிரம்ப்

Oct 21, 2021

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கினார்.

தனது டிரம்ப் மீடியா& டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் “ ட்ரூத் சோஷியல்” என்ற சமூக வலைதளத்தை டிரம்ப் இன்று தொடங்கியுள்ளார்.

“ட்ரூத் சோஷியல்” ஆப் அமெரிக்கா முழுவதும் முதல் காலாண்டில் வெளியாக வாய்ப்பு என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஆப்பிள் ஸ்டோரில் “ ட்ரூத் சோஷியல்” ஆப் வெளியிடப்பட்ட நிலையில் பீட்டா பதிப்பு நவம்பரில் வெளியிடப்படுகிறது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் டிரம்பின் கணக்குகளை டுவிட்டர், முகநூல் நிறுவனங்கள் முடக்கிய நிலையில் சொந்தமாக சமூக வலைதளத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இன்று தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.