• Mon. Nov 4th, 2024

வான்கோழிகளை மன்னித்த அமெரிக்க அதிபர்!

Nov 22, 2021

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவிக்கும் நாளன்று(Thanks giving Day) வான்கோழிகளை மன்னித்த நிகழ்வு நடந்துள்ளது.

நன்றி தெரிவிக்கும் நாள் என்பது அமெரிக்காவில் ஒரு பாரம்பரியமான பண்டிகை ஆகும். தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல், சமூக, கலாச்சார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழா விடுமுறை அளித்துக் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக இந்த நாளில் அமெரிக்கர்கள் வான்கோழிகளை சமைத்து உண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேசமயம் இந்த நாளில் அமெரிக்காவின் அதிபர் இரண்டு வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது என்பது வழக்கமாக உள்ளது. மன்னிக்கப்பட்ட வான்கோழிகள் உயிரியல் பூங்காக்களில் வைத்து பாதுகாக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் நாளில் அதிபர் ஜோ பைடன் இரண்டு வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.