• Tue. Apr 16th, 2024

உக்ரைன் ஜனாதிபதியைச் சந்திக்கும் அமெரிக்க துணை ஜனாதிபதி

Feb 19, 2022

ரஷ்யா- உக்ரைன் இடையே போர்ப்பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி Kamala Harries சை இன்று உக்ரைன் ஜனாதிபதி Volodumr Zelenskiy சந்திக்கயுள்ளனர்.

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் அணு ஆயுத பயிற்சியை பார்வையிட்டது, கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வெளிநடப்பு அறிவிப்பு, மற்றும் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகளின் குவிப்பு போன்ற பல காரணிகள் போருக்கான பதற்றத்தை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா வரும் நாள்களில் நிச்சியமாக போர் தொடுக்கும் என தான் உறுதிபட நம்புவதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ரஷ்யா இன்னும் சில தினங்களில் உக்ரைன் மீது போர் தொடுக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு ரஷ்யா போர் தொடுத்தால் நேட்டோ அமைப்பின் மிகப்பெரிய கால் தடம் உங்கள் பிராந்தியத்தில் பதியும் எனவும், இதன் மூலம் ரஷ்யா மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி Kamala Harries ஜெர்மனியின் முனிச் நகரில் இன்று உக்ரைன் ஜனாதிபதி Volodumr Zelenskiy சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின் மூலம் உக்ரைனுக்கு ஐரோப்பிய மற்றும் நேட்டோ அமைப்பின் பலத்த ஆதரவு இருப்பதாய் வெளிக்காட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.