loader
Get the latest breaking news and top news headlines
Happening now on Tamil4 Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

அசாம் இளைஞருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளி அசாம் மாநில இளைஞர் மொசாம் அலிக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய வாழ்நாள் சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்தது.

சித்துராஜபுரம் ஜக்கம்மாள் குடியிருப்பைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்தையாவின் 8 வயது மகள் 2020 ஜனவரி 20 ஆம் தேதி மாலை வீட்டு வெளியே சென்றபின் காணாமல் போனார். பல மணி நேர தேடுதல் நடவடிக்கைக்குப் பின், அருகிலிருந்த முள்புதரில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிவகாசி நகர் போலீசார் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தினர்.

தொடர் விசாரணையில், சிவகாசி பட்டாசு ஆலையில் பணிபுரிந்த அசாம் மாநில நபாரி மாவட்டத்தை சேர்ந்த மொசாம் அலி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தடய அறிவியல் மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

வழக்கை விசாரித்த விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு மொசாம் அலிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கௌரி அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட ஆதாரங்கள் குற்றத்தை தெளிவாக நிரூபித்துள்ளதாக தெரிவித்தது.

இரு தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் வழங்கிய வாழ்நாள் சிறைத் தண்டனையை உறுதி செய்து, மொசாம் அலியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

3 Comments

leave a reply

Recent Posts

Head Lines

Categories

more headlines in our related posts

latest # news

Tamil4 News

TV and Radio/blog