கொரோனா பரவ தொடங்கிய சமயத்திலிருந்து அலுவலகங்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் சானிடைசரின் பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது. அனைத்து இடங்களிலும் சானிடைசர் இருப்பது நல்லது தான். ஆனால் அதன் பயன்பாடு அளவாக இருக்க வேண்டும்.
சில சானிடைசர்களில் ஆல்கஹால் பயன்படுத்துவதற்கு பதிலாக ட்ரைக்ளோசன் (Triclosan) என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள கேடயமாக விளங்குவது சுத்தத்துடனும் சுகாதாரத்துடனும் இருப்பதுதான்.
கொரோனா பரவ தொடங்கிய சமயத்திலிருந்து சானிடைசர் எனும் சுத்திகரிப்பான் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சுத்திகரிப்பான் வைரஸைக் கொல்ல உதவும் என்றாலும், அதை கவனமாக கையாள வேண்டும்.
அடிக்கடி இந்த சானிடைசர் பயன்படுத்துவதால் சில தொல்லைகள் ஏற்படலாம். சானிட்டைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் உள்ளதால் வைரஸ்களை திறம்பட கொல்ல முடியும். ஆனால் சில சுத்திகரிப்பாளர்களில் ட்ரைக்ளோசன் என்ற ரசாயனம் ஆல்கஹாலுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த ட்ரைக்ளோசன் என்பது பூச்சிக்கொல்லிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம். எனவே இதில் விஷத்தன்மைக் கொண்டது. இது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல.
இத்தகைய சுத்திகரிப்பாளர்களை அடிக்கடி பயன்படுத்திவிட்டு ஏதேனும் உணவைச் சாப்பிடுவதால் இது எளிதில் நம் உடலில் செல்லக்கூடும். இதனால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். தசைகள் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்படும். இதனால் செரிமான அமைப்பும் பாதிப்படையும்.