• Tue. Dec 5th, 2023

விண்வெளியில் ஒலிக்கத் தயாராகும் இளையராஜாவின் இசை

Jan 19, 2022

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிகளில் இசையமைத்து வரும் இசைஞானி இளையராஜாவின் இசை விண்வெளியில் ஒலிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி உலகிலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. குறித்த சாட்டிலைட்டில் இளையராஜாவின் இசை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் உதவியுடன் இளையராஜாவின் பாடல் இடம்பெற்றுள்ள குறித்த சாட்டிலைட் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.