• Thu. Feb 13th, 2025

ரஷிய தாக்குதலில் உக்ரைனின் 2 இளம் கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு

Mar 3, 2022

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் 8வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 2 கால்பந்து வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

அவர்கள் விட்டாலி சபைலோ (வயது 21) மற்றும் டிமிட்ரோ மார்ட்டினென்கோ (வயது 25) என கண்டறியப்பட்டு உள்ளனர். சபைலோ, லிவிவ் நகரின் கர்பாத்தி இளைஞர் அணியின் 3வது பிரிவில் கோல் கீப்பராக இருந்து வந்துள்ளார்.

மார்ட்டினென்கோ, ஹோஸ்டோமெல் அணியின் 2வது பிரிவில் கடைசியாக விளையாடியுள்ளார்.

இவர்களது மறைவை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஃபிப்ரோ உறுதிப்படுத்தி உள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்களுடைய நினைவுகள், அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர்களது சக வீரர்களுடன் இருக்கும்.

இந்த போரில் கால்பந்து விளையாட்டில் முதல் இழப்பு பற்றிய செய்தி இது. அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்து உள்ளது.