• Sun. Dec 8th, 2024

2021 ஐ.சி.சி டெஸ்ட் அணியில் இடம் பிடித்த 3 இந்திய வீரர்கள்

Jan 20, 2022

2021 ஐ.சி.சி டெஸ்ட் போட்டிக்கான ஆடவர் அணியில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி. தேர்வு செய்துள்ள அணியில், அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களும், 3 பாகிஸ்தான் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

சிறந்த டெஸ்ட் அணி வீரர்கள்: ரோகித் சர்மா, கருணரத்னே, லாபஸ்சேங், ஜோ ரூட், வில்லியம்சன், பாவத் அலம், ரிஷப் பண்ட், அஸ்வின், ஜேமிசன், ஹசன் அலி, ஷாகின் அபிரிடி.

முன்னதாக 2021ம் ஆண்டின் சிறந்த டி20 லெவனை ஐசிசி தேர்வு செய்தது. அதில் அதிகமாக பாகிஸ்தான் வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்தினர்.

இதன்படி 2021ம் ஆண்டில் 589 ரன்களை குவித்த இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மற்றும் கடந்த ஆண்டில் 1326 ரன்களை குவித்துள்ள பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக ஐசிசி தேர்வு செய்தது.

3ஆம் வரிசையில் பாகிஸ்தான் கேப்டனான பாபர் அசாமை தேர்வு செய்த ஐசிசி, அவரையே இந்த அணியின் கேப்டனாகவும் நியமித்திருந்தது.

ஐசிசி தேர்வு செய்த இந்த அணியில் அதிகபட்சமாக பாகிஸ்தானை சேர்ந்த 3 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னந்தாக இன்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திற்கு முன்னேறியது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றதால் ஆஸ்திரேலிய அணி முதலிடம் பெற்றது. நியூசிலாந்து அணி 2வது இடம் பிடித்து உள்ளது. இந்திய அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.