• Tue. Dec 3rd, 2024

2022ல் இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி; விளையாட உள்ள ஆப்கானிஸ்தான்!

Dec 15, 2021

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

இரண்டு வருட காலப்பகுதியில் ஆப்கானிஸ்தான் உள்நாட்டில் 11 ODI, 4 T20I மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது.

அத்தோடு 52 சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது அதில் 37 ஒருநாள், 12 T20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் அடங்குகின்றன.

அந்த இரண்டு ஆண்டுகளில், தேசிய அணி 2022 இல் ஆசிய கோப்பையிலும், அதே ஆண்டில் ICC T20 உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாடவுள்ளது.

அதே ஆண்டில் ஐசிசி டி20 உலகக் கிண்ணம், அதைத் தொடர்ந்து ஆசியக் கிண்ணம் மற்றும் 2023ல் ஐசிசி 50 ஓவர் உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடவுள்ளது.

அடுத்த ஆண்டு நெதர்லாந்துக்கு எதிரான ODI தொடருடன் ஆரம்பமாகும் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிகள் சிம்பாப்வேக்கு எதிரான போட்டியுடன் நிறைவுக்கு வருகின்றது.