• Mon. Oct 18th, 2021

3-வது டி-20 கிரிக்கெட் – இந்திய அணி முதல் பேட்டிங்

Jul 29, 2021

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், 2-வது ஆட்டத்தில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன.

இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தற்போது முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

இலங்கை அணியில் உதனாவிற்கு பதிலாக பாத்தும் நிசாங்கா அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் நவ்தீப் சயினிக்கு பதிலாக சந்தீப் வாரியர் அணியில் சேக்கப்பட்டுள்ளார்.

இன்றைய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்;-

இந்திய அணி – தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், சேத்தன் சகாரியா, வருண் சக்கரவர்த்தி.

இலங்கை அணி – அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, சமரவிக்ரமா, ரமேஷ் மெண்டிஸ், ஷனகா, (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, பாத்தும் நிசாங்கா, அகிலா தனஞ்ஜெயா, துஷ்மந்தா சமீரா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.