• Mon. Jan 17th, 2022

ஐசிசி தரவரிசை: பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் 2 ஆவது இடம்!

Jan 12, 2022

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இடம் வகிக்கிறார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் உள்ளார்.

3 ஆம் இடத்தில் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் உள்ளார்.

முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

பேட்டிங்க் தரவரிசையை பொருத்தவரை முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் லபுசேன் உள்ளார்.

2- ஆம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் உள்ளார். 3 ஆம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.

4 ஆம் இடத்தில் கேன் வில்லியம்சனும், 5-ஆம் இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 9 ஆம் இடத்தில் உள்ளார்.