• Fri. Jul 26th, 2024

இன்று மோதும் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்

Mar 30, 2022

கடந்த சில நாட்களாக மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது .

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 18 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்து உள்ளன.

இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.