• Tue. Dec 3rd, 2024

ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா!

Dec 16, 2021

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹாரிஸ் ஆரம்பத்திலேயே மூன்று ரன்களுக்கு அவுட் ஆகி விட்டார். இதனை அடுத்து தற்போது ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியின் ஸ்டார்ட் பிராடு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆஷஷ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டியை இங்கிலாந்து கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.