வரும் பிப்ரவரி மாதம் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. ஏப்ரம் மே மாதங்களில் நடக்கும் இத்தொடர் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக கருதப்படுகிறது.
இந நிலையில், இந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடருடன் ஐபிஎல் வீரர்களுக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது.
இதனால் ஒவ்வொரு அணியும் தங்களிடம் உள்ள 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் மீதமுள்ள வீரர்களை ஏலத்தின் மூலம் எடுக்க உள்ளது.
15 வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12 ,13 ஆம் தேதிகளில் நடைபெறும் என தகவல் வெளியாகிறது.