• Mon. Oct 18th, 2021

சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் தோனி

Oct 11, 2021

நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் முதலாவது பிளே ஆப் போட்டி நடந்தது என்பதும் இந்த போட்டியில் தல தோனி மிக அபாரமாக விளையாடி மீண்டும் ஒரு நல்ல ஃபினிஷர் என்பதை உறுதி செய்தார்.

கடந்த சில போட்டிகளில் தல தோனி சரியாக விளையாடாததால் அவரது பெர்பாமன்ஸ் குறித்து கேள்விகள் எழுந்தன. குறிப்பாக அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் இருக்கமாட்டார் என்றும் அவர் தனது பேட்டிங் திறனை இழந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் நேற்றைய போட்டியில் கடைசி நேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இறங்கி ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசிய சென்னை அணிக்கு வெற்றியை தேடிக் கொண்டார்.

தல தோனி மீண்டும் ஒரு நல்ல ஃபினிஷர் என்பதை உறுதி செய்ததை அடுத்து தல தோனியின் ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.