• Sat. Nov 2nd, 2024

நான் விரும்பும் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் ; இளம் வீரரின் அறிவிப்பால் ரசிகர்கள் கவலை

Aug 31, 2021

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான டேல் ஸ்டெய்ன் அந்த அணிக்காக 93 டெஸ்ட், 125 ஒருநாள் மற்றும் 47 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2020-இல் அவர் டி20 போட்டியில் விளையாடி இருந்தார்.

இந்நிலையில், கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார்.

“நான் அதிகம் விரும்பும் விளையாட்டிலிருந்து இன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறேன். நண்பர்கள், சக அணி வீரர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இந்த பயணம் மிகவும் அற்புதமானது” என தனது ஓய்வு அறிவிப்பில் தெரிவித்துள்ளார் அவர்.

இதேவேளை சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மொத்தம் 699 விக்கெட்டுகளை டேல் ஸ்டெய்ன் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.