• Sun. Dec 8th, 2024

நாளை மோதும் இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகள்

Jan 18, 2022

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

இந்நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள பார்ல் நகரில் நாளை நடக்கிறது.

இந்த தொடரில் கே.எல் ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படவுள்ளார்.