• Thu. Oct 31st, 2024

உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பு அதிகம்

Oct 22, 2021

உலகக் கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தொடரில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 12-ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பிரிவு இரண்டில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக், நடப்பு டி-20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.