• Sun. Apr 14th, 2024

ஐபிஎல் – இன்று சென்னை vs ஐதராபாத்!

Sep 30, 2021

ஐபிஎல் தொடரில் இன்று 44வது போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 18 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு உறுதி செய்யப்படும்.

அதே நேரத்தில் ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரு சிறிய வாய்ப்பிருப்பதால் இன்றைய போட்டியில் சென்னை அணியை வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

சென்னையை பொறுத்தவரை எட்டு பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அந்த அணி தொடர் வெற்றியை பெற்று வருகிறது. அதேபோல் ஐதராபாத் அணியில் உள்ள பேட்ஸ்மேன்களும் தற்போது ஃபார்முக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.