• Mon. Dec 2nd, 2024

டெஸ்ட் தொடரில் ஜாஸ்பிரித் பும்ராவுக்கு கணுக்காலில் காயம்..!

Dec 28, 2021

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 105.3 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் விளையாடி வருகிறது.

இதில் ஜாஸ்பிரித் பும்ரா தனது முதல் ஓவரிலேயே கேப்டன் டீன் எல்காரை அவுட்டாக்கினார்.

தொடர்ந்து பந்து வீசி வந்த அவர் தனது ஐந்தாவது ஓவரை வீசிய போது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டதால் அவதிப்பட்டார்.

இதனால் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெவிலியன் திரும்பினார்.

அவருக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரராக ஸ்ரேயஸ் அய்யர் பீடிங்கில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் மருத்துவக்குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.