இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 63.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 7, முகமது ஷமி 2 , பும்ரா 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர்.
நேற்று 3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 266 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டை இழந்தது. சிறப்பாக விளையாடிய புஜாரா 53, ரகானே 58 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
இதன் பிறகு இந்திய அணி 2-வது இன்னிங்சில் 60.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 240 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த சூழலில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கியது.
ஆனால் மழை காரணமாக இன்றைய ஆட்டம் தாமதாக தொடங்கியது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 67.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்ற பெற்றது.