• Fri. Jul 26th, 2024

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை: எகிப்தை வென்ற தென் கொரியா

Dec 1, 2021

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் கொரியா ஷூட் அவுட் முறையில் வென்றது.

குரூப் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், 9 முதல் 16 இடங்களைப் பிடிப்பதற்கான ஆட்டங்களின் ஒரு பகுதி நேற்று(30) நடைபெற்றது. இதில் தென் கொரியா – எகிப்து அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

தென் கொரிய தரப்பில் கிம் ஹியூன்வூ (18’), ஜியோங் ஜுன் சியோங் (20’,58’) ஆகியோரும், எகிப்து அணிக்காக எல்கனாய்னி அப்துல்ரஹ்மான் (42’,54’), ரகாப் ஹொசாமெல்தின் (46’) ஆகியோரும் கோலடித்தனா்.

பின்னா் வெற்றியாளரை நிா்ணயிக்க நடத்தப்பட்ட ஷூட் அவுட் முறையில் தென் கொரியா 6-5 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தியது. இதர ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா – கனடாவையும் (7-3), பாகிஸ்தான் – அமெரிக்காவையும் (18-2), போலந்து – சிலியையும் (2-1) வென்றன.