ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மெல்போர்ன் சம்மர் செட் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், ஆடவர் ஒற்றையர் போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் பின்லாந்து நாட்டின் எமில் ரூசுவுவோரி ஆகியோர் விளையாடினர்.
இதில், ஒரு மணிநேரம் மற்றும் 56 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அவர் அமெரிக்காவின் மேக்சிம் கிரெஸ்சியுடன் அடுத்து விளையாட உள்ளார்.