• Mon. Dec 9th, 2024

அதிரடி சதம் அடித்தார் மிட்செல் மார்ஷ்

Dec 14, 2021

மிட்செல் மார்ஷ் 60 பந்துகளில் 100 ரன்கள் குவித்து பிக்பாஷ் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக்.

இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்சேர்ஸ் மற்றும் கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணி 20 வர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 பந்துகளில் 100 ரன்கள் குவித்து பிக்பாஷ் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

183 ரன்கள் இலக்குடன் கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் மேக்டெர்மோட் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்,

அதன் பிறகு வந்த வீரர்கள் யாரும் சோபிக்காத நிலையில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.