• Wed. Jan 15th, 2025

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தள்ளி வைப்பு!

Jul 10, 2021

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற 13ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றது. அதேபோல் இங்கிலாந்து தொடரை முடித்துவிட்டு இலங்கை அணியும் தாயகம் திரும்பி உள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

மேலும், இலங்கை அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 13ம்தேதி தொடங்க இருந்த இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 4 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட அட்டவணையின்படி, முதலாவது ஒருநாள் போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. 2வது ஒருநாள் போட்டி 19ஆம் தேதி நடைபெறுகிறது. கடைசி ஒருநாள் போட்டி 21ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளனர்.