• Sun. Jan 19th, 2025

ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற கர்ப்பிணி வீராங்கனை!

Jun 30, 2021

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதி சுற்றில் கர்ப்பிணியாக இருக்கும் தடகள வீராங்கனை லிண்ட்சே ஃப்ளாச் (Lindsay flach) பங்கேற்றார்.

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றில் 18 வார கால கர்ப்பிணியாக இருக்கும் தடகள வீராங்கனை லிண்ட்சே, பங்கேற்றார்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஷாட்புட், ஜாவ்லின் உள்ளிட்ட 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் பங்கேற்ற அவர், 18 பேரில் 15-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.