• Sun. Dec 8th, 2024

விலகினார் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா

Dec 22, 2021

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

வரும் டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் பிரபல தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா காயம் காரணமாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி, ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.