• Tue. Dec 5th, 2023

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திரவீரர் நாட்டை விட்டு வெளியேறுகின்றாரா?

Jun 19, 2021

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய நாட்டை விட்டுச் செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் தரப்பில் தனது ஒத்துழைப்பை வழங்க அவர் தயாராக இருந்த போதிலும் கிரிக்கெட் சபை தரப்பு அதனை கணக்கில் கொள்ளவில்லை எனவும், இதன் காரணமாக மிகுந்த சங்கடத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை சனத் ஜயசூரியவுக்கு அவுஸ்திரேலியா குடியுரிமை கொடுக்க தீர்மானித்துள்ளதுடன் அவுஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சனத் தலைமை தாங்கவுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகிறது.