• Tue. Nov 5th, 2024

டி20 போட்டி; 19 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடிய இலங்கை அணி!

Oct 7, 2021

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமன் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அவிஸ்க பெர்ணான்டோ 83 ஓட்டங்களையும், தசுன் சானக 51 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி, 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.