• Sun. Jul 3rd, 2022

டி-20 உலகக் கோப்பை – பாகிஸ்தான் அணி வெற்றி

Nov 8, 2021

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்றைய சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி விளையாடியது.

இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்ஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து, ஸ்காட்லாந்து அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

எனவே பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.