• Sat. Sep 23rd, 2023

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்றது டாடா நிறுவனம்!

Jan 11, 2022

பிஎல் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா நிறுவனம் பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் எனப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பணம் கொழிக்கும் தொடராக உள்ள ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை சீனாவின் விவோ நிறுவனம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா கைப்பற்றியுள்ளது.