• Tue. Mar 26th, 2024

இந்திய அணி தோற்க வேண்டும் என நினைத்தவர்களும் உண்டு- ரவி சாஸ்திரி

Dec 10, 2021

5 ஆண்டுகள் இந்திய அணிக்குப் பயிற்சி அளித்து அணியை நல்ல நிலமைக்குக் கொண்டு வந்து விட்டார் ரவிசாஸ்திரி.

இப்போது பதவியிலிருந்து இறங்கிய பிறகு அது இது என்று ஆயிரெத்தெட்டு உள்விஷயங்களை வெளியில் பகிர்வது அநாகரீகம் என்று கருதுவதற்கேற்ப பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அவர்.

அதாவது, இந்த இந்திய அணி தோற்க வேண்டும் என்று நினைத்த எதிர்மறைச் சக்திகளும் தன்னைச் சுற்றி இருந்தது என்கிறார் ரவி சாஸ்திரி.

, டைம்ஸ் ஆஃப் இந்தியாவுகு அவர் அளித்த பேட்டியில், “நிறைய எதிர்மறைகள் இருந்தன, ஆனால் அதிர்ஷ்டவசமக அவை என்னைத் தீண்டவில்லை. என்னை நன்றாக அறிந்தவர்கள் அறிவார்கள் என் தோல் தடிமனானது என்னை எதிர்மறைகள் ஒன்றும் செய்ய முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இந்த இந்திய அணி சாதனைகளைப் பார்த்து பொறாமைப் பட்டவர்களின் பாதுகாப்பின்மையை நினைத்து எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. இந்த அணி தோல்வி அடைய வேண்டும் என்று நினைத்தவர்களின் வயிற்றெரிச்சலுக்கு மாறாக நாங்கள் ஜெயித்துக் கொண்டேதான் இருந்தோம்.

இங்கிலாந்துக்கு செல்லும் முன்னரே நான் என் மனதைத் தேற்றிக் கொண்டேன் , ஒன்று எனக்கு 60 வயது , பிறகு பயிற்சியாளர் பதவி குறித்த உச்ச நீதிமன்ற விதிமுறைகள் இருந்தன, அதனால் தேற்றிக் கொண்டேன். மேலும் இந்த கொரோனா வைரஸ் குவாடண்டைன், பயோ பபுள் பாதுகாப்பு வளையமெல்லாம் இன்னும் 2 ஆண்டுகளுக்கு என்றால் நமக்குத் தாங்காது.

கிரிக்கெட் தனிமையில் ஆடப்பட்டு வருகிறது. இப்போது இதைத்தான் நாம் பார்த்து வருகிறோம். நான் போதுமானவற்றை கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். எத்தனை நாளைக்குத்தான் இப்படி போக முடியும்?” என்றார் சாஸ்திரி.

முன்னதாக இதே பேட்டியில் சாஸ்திரி தான் பயிற்சியாளராக வருவது பிசிசிஐ-யில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்று ஒரு குண்டைத்தூக்கி போட்டார்.

“என்னுடைய இரண்டாவது பதவிக்காலம் பெரிய சர்ச்சை ஓய்ந்த பிறகு தொடங்கியது. என்னை வேண்டாம் என்றவர்கள் முகத்தில் கரி பூசிய சம்பவம். ஒருவரை நியமிக்கின்றனர், 9 மாதம் கழித்து அவர் வேண்டாம் என்று என்னை நியமித்தனர்.

நான் பொத்தாம் பொதுவாக பிசிசிஐ மீது குற்றம்சாட்ட விரும்பவில்லை. குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே காரணம். நான் பயிற்சியாளராக வரக்கூடாது என்று சிலர் விரும்பினர். ஆனால் இதுதான் வாழ்க்கை” என்றார் ரவிசாஸ்திரி