• Thu. May 26th, 2022

விலகினார் விராட் கோலி

Jan 15, 2022

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வியடைந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருபதுக்கு 20, ஒரு நாள் அணிகளின் தலைவர் பதவியிலிருந்து ஏற்கெனவே விராட் கோலி விலகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இந்திய அணியின் டெஸ்ட் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும், இந்திய அணியின் தலைவராக நீண்ட நாட்களாக பணியாற்ற வாய்ப்பு வழங்கியமைக்காக பிசிசிஐக்கு நன்றி” என்று தனது டுவிட்டர் பதிவில் கோலி குறிப்பிட்டுள்ளார்.