• Wed. Dec 4th, 2024

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விலகிய விராட் கோலி

Jan 4, 2022

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்டில் இந்திய அணி நாணய சுழற்சியை வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2 வது டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது.

காயம் காரணமாக விராட் கோலி இந்த டெஸ்டில் பங்கேற்கவில்லை. இதனால் கே.எல். ராகுல் தலைவராக களம் இறங்கியுள்ளார். நாணய சுழற்சியை வென்ற ராகுல், துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி தேர்வாகியுள்ளார். தெ.ஆ. அணியில் ஓய்வு பெற்ற டி காக்குக்குப் பதிலாக கைல் வெரீனும் முல்டருக்குப் பதிலாக ஆலிவரும் தேர்வாகியுள்ளார்கள்.