• Tue. Nov 5th, 2024

டோனி தொடர்பில் விராட் கோலி புகழாரம்

Oct 16, 2021

இந்தியா அணி ஆலோசகராக முன்னாள் கேப்டனான டோனி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை அக்டோபர் (17) தொடங்கி, நவம்பர் 14 ஆம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆலோசகராக இந்திய அணி முன்னாள் கேப்டனான டோனி இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது .

2007 ஆம் ஆண்டு நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்தவர் டோனி.

இந்நிலையில் டோனி ஆலோசகராக நியமித்தது குறித்து கருத்து தெரிவித்த விராட் கோலி,

டோனி ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் ஆலோசகராக இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தரும் என கூறியுள்ளார்.