• Sun. Dec 8th, 2024

இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

Jan 17, 2022

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி நேற்று முன்தினம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த சில தினங்களில் கோலி டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டை நியமிக்கலாம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இளம் வீரரான ரிஷாப் பண்டுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கினால் அவர் 3 வடிவிலான போட்டியிலும் இன்னும் சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.