பங்களாதேஷ் அணியின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரங்கன ஹேரத், டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணம் தொடர் வரை சுழல்பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர்ரான ரங்க ஹேரத் 2018 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் முதல் முறையாக சுழல்பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரங்கன ஹேரத், மற்ற இடது கை பந்து வீச்சாளர்களை விட அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் ஸ்பின் பந்துவீச்சில் நிபுணத்துவம் பெற்ற லெவல் 3 கோச்சிங் படிப்பை (ஐ.சி.சி / எஸ்.எல்.சி) முடித்துள்ளார்.
மேலும் ரங்கன ஹேரத், 2016 ஆம் ஆண்டில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை படைத்த மிக வயதான வீரர் மற்றும் இரண்டாவது இலங்கை வீரருமாவார்.
இதேவேளை ரங்கன ஹேரத்துக்கு முன்னர் இந்த சாதனையை நிகழ்த்திய மற்ற இலங்கை வீரர் நுவன் சொய்சா ஆவார்.