• Fri. Sep 17th, 2021

இலங்கை

  • Home
  • யாழில் நீதிகோரி பொலிஸ் நிலையம் முன்பாக குவிந்த மக்கள்!

யாழில் நீதிகோரி பொலிஸ் நிலையம் முன்பாக குவிந்த மக்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். காங்கேசன் துறை பொலிஸ் நிலையம் முன்பாக வீதியோரமாக நேற்றைய தினம் சுயநினைவற்றிருந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில்…

இலங்கையில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுமா – இன்று முடிவு

இலங்கையில் கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதிமுதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நீடிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கப்படுமா? அல்லது கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படுமா என்பது தொடர்பில், இன்றையதினம்(17) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணியின் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின்…

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

சிறைச்சாலைகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று ஆரம்பித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பான சுய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக்கமைய, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள்…

ஊழியரின் முகத்தில் சுடு தண்ணீரை ஊற்றிய இராணுவ வீரர்

கராப்பிடிய வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து இராணுவ வீரர் ஒருவருக்கும், வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், ஊழியரின் முகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொதிக்கும் சுடு நீரை ஊற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதேவேளை தீக்காயங்களுக்கு உள்ளான வைத்தியசாலையின் ஊழியர் கராப்பிடிய வைத்தியசாலையின்…

இலங்கை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! அழைப்பு விடுத்துள்ள நாடு

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் வேலைவாய்ப்புகளை வழங்க உடன்பட்டுள்ளது. அதன்படி ஜப்பானில் விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என…

60 வயதுக்கு மேற்பட்ட 106 பேர் உயிரிழந்துள்ளனர்!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 136 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் செப்டெம்பர் 13 உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,567 ஆக…

வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை; ஐநாவுக்கு பீரிஸ் பதில்

46/1 தீர்மானத்தின் கீழ் நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறையையும் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பு தொடர்பாக பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று(14) அமெரிக்காவின் நியூ​யோர்க்கில் ஆரம்பமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். “நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை உருவாக்குதல், கொவிட் 19ஐ ஒடுக்குவதன்…

ராஜபக்சர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் சிங்களவர்கள்!

இலங்கை நாட்டுத் தலைவர்கள் வௌிநாடு செல்லும் போது விடுதலைப் புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் காலம் மாறி இன்று ராஜபக்ச வௌிநாடு செல்லும் போது வௌிநாட்டில் உள்ள சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…

இலங்கை எம் பியின் விசித்திர கோரிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒருமாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார சுமித்ஆராச்சி ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் இரண்டு வேளையாக அவர்களது உணவை குறைக்க வேண்டும்…