• Fri. Mar 14th, 2025

அவசர நிலையை வாபஸ் பெறும் இலங்கை அதிபர்

Apr 6, 2022

இலங்கையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவசர நிலை வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாளுக்கு நாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டத்தை மக்கள் நடத்தி வரும் நிலையில் அவசர நிலை ஏப்ரல் ஒன்றாம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பொது மக்களின் கொந்தளிப்பு காரணமாக தற்போது அவசர நிலையை வாபஸ் பெறப் போவதாக இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கையின் கோட்டாபய அரசுக்கு இருந்த பெரும்பான்மை இழக்கப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து பரபரப்பான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.