• Thu. Nov 21st, 2024

உடலிலுள்ள சளியை அகற்றுவதற்கான வீட்டு வைத்தியங்கள்

Jul 1, 2021

அதிகப்படியான சளியை அகற்றுவதற்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை சுவாசிப்பதை எளிதாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இஞ்சியில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள், நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை எளிதில் வெளியேற்ற உதவி புரியும்.

இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் சேர்த்து, தினமும் சில முறை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால், உடலில் இருக்கும் அதிகப்படியான சளி அகற்றப்படும்.

உடலில் உள்ள சளியை உடைத்தெறிய உதவும் ஒரு அற்புதமான உணவுப் பொருள் பூண்டு. பூண்டில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களால் சுவாச சுரப்பிகளில் உருவாகும் அதிக சளியை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

அன்னாசி பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆஸ்துமா மற்றும் அழற்சியுடன் தொடர்புடைய சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். அதோடு அன்னாசி ஜூஸில் உள்ள மியூகோலைடிக் பண்புகள் சளியை முறித்து எளிதில் வெளியேற்ற உதவி புரியும்.

ஏலக்காய் உடலில் அதிகப்படியான சளி உருவாவதைக் குறைக்க உதவுகிறது. பாரம்பரியமாக ஏலக்காய் உணவு உட்கொண்ட பின் நல்ல செரிமானத்திற்கு எடுக்கப்படுகிறது. இது சளி ஜவ்வுகளைப் பாதுகாப்பதன் மூலம் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.