பாலிவுட் நடிகையான ஹியூமா குரேஷி, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக காலா திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
கோலிவுட்டின் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கதாபாத்திரமாக ஹியூமா குரேஷியின் கதாபாத்திரம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் திரைப்படமான வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ஹியூமா குரேஷி கொரோனா 3வது அலையை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான தனி ஆக்சிஜன் வார்டு ஒன்றை உருவாக்கி வருகிறார்.
ஹியூமா கூறுகையில், “கொரோனா 3 வது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனால் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, என்னுடைய தொண்டு நிறுவன அமைப்பு மூலம் இதுவரை 100 க்கும் அதிகமாக ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.” என்று கூறியுள்ளார்.
குழந்தைகளுக்காக முன் எச்சரிக்கையாக ஹியூமா குரேஷி செய்துவரும் இந்த செயலானது ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகின்றது.