சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் உச்சநடிகராக இருந்த போது அவரை பேட்டி எடுக்க வந்த லதா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ரஜினிகாந்த் – லதா தம்பதியருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இளைய மகள் சௌந்தர்யாவிற்கு பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அது சரி வராமல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த சௌந்தர்யா சினிமா நடிகர் விசாகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் ரஜினி படத்தின் சம்பளத்தை இருவரும் பங்க் போட்டு வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யா சௌந்தர்யா விற்கு தனி தனி வீடு இருந்தாலும் ரஜினி இருக்கும் போயஸ் கார்டன் வீடு யாருக்கு என நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் தனது இளைய மகள் சௌந்தர்யாவிற்கு தான் போயஸ் கார்டன் வீடு என பேச்சுவார்த்தையில் முடிவானதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஐஸ்வர்யாவை சமாதான படுத்த குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதில் தற்போது ரஜினி இருக்கும் போயஸ் கார்டன் வீடு இளைய மகள் சௌந்தர்யாவிற்கு தான் என்றும் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு போயஸ் கார்டன் பகுதியிலேயே 150 கோடிக்கு புது வீடு கட்டி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.